அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இரத்தினபுரி நகரக் கிளையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள பள்ளிவாயல் நிர்வாகிகளுக்கான பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்து தெளிவுபடுத்தும் வழிகாட்டல் கருத்தரங்கு 2026 ஆகஸ்ட் 07 அன்று இரத்தினபுரி, அல்-ஜன்னத் மஸ்ஜிதில் நடைபெற்றது.
இதன்போது, மஸ்ஜித் நிர்வாகிகளின் மீதுள்ள சமூக பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்து சுட்டிக் காட்டப்பட்டதுடன் சமூக முன்னேற்றத்திற்கான திட்டங்களை, முன்னெடுப்புக்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பிலும் விரிவாக தெளிவுபடுத்தப்பட்டது.
அத்தோடு, இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்கள் மற்றும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
இதில், இரத்தினபுரி நகர் பகுதியிலுள்ள மஸ்ஜிதுகளின் நிர்வாகிகள் பலர் கலந்து பயன்பெற்றனர்.
இக்கருத்தரங்கில், ஜம்இய்யாவின் பதில் தலைவர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான்,பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், உப தலைவர் அஷ்-ஷைக் எச். உமர்தீன் மற்றும் உப பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளரீஃப், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன் மற்றும் அஷ்-ஷைக் ஏ.எச்.எம். அக்ரம் ஆகியோர் கலந்துகொண்டு மஸ்ஜித் நிர்வாகிகளுக்கான வழிகாட்டல்களை வழங்கினர்.



– ACJU Media –


