2024.05.08ஆம் திகதி, உலக முஸ்லிம் லீக்கின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆசியக்கண்ட சன்மார்க்க அறிஞர்களுக்கான மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் கலந்துகொண்டு ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தனது உரையில் உலக அமைதியின் அவசியம் மற்றும் சமூக ஐக்கியத்தின் தேவை குறித்தும் கருத்து முரண்பாடான விடயங்களில் புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்புடன் நடந்துகொள்வதில் அறிஞர்கள் கூடிய கவனம்செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், சகவாழ்வின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒவ்வொரு சமூகமும் செயலாற்ற முன்வர வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார்.
இம்மாநாட்டில் மலேசியாவின் அதிமேன்மைக்குரிய துணைப் பிரதமர் கலாநிதி அஹ்மத் சாஹித் பின் ஹாமிதி, மலேசிய கலாச்சார அமைச்சர் கலாநிதி ஹாஜ் முஹ்த் நயீம் பின் ஹாஜி முக்தார் மற்றும் உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் கலாநிதி முஹம்மத் பின் அப்துல் கரீம் அல் ஈஸா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட, மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கான நிலைப்பாடுகளும் வழிகாட்டல்களும் எனும் ‘மன்ஹஜ்’ நூலின் பிரதிகள், மேற்படி பிரதானிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டன.
– ACJU Media –