ACJU/NGS/2025/167
2025.09.19/1447.03.26
முல்லைத்தீவு நீராவிப்பிட்டியை சேர்ந்த அஷ்-ஷைக் அனிபா முஜீப் (اللهم اغفرله وارحمه) அவர்களின் மரணச் செய்தி எம்மை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அவர்கள் 2025.09.18 ஆம் திகதி வியாழக்கிழமை வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
முல்லைத்தீவு நீராவிப்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் கற்பிட்டி ரஹ்மானிய்யா அறபுக் கல்லூரியில் சேர்ந்து ரஹ்மானி பட்டம் பெற்று மௌலவியாக வெளியேறினார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முல்லைத்தீவு மாவட்டக் கிளையின் தலைவராக செயற்பட்ட அவர், முல்லைத்தீவு ஹிஜ்ரா புரம் ஜுமுஆப் பள்ளிவாசலின் தலைவராகவும் யாழ்ப்பாண மாவட்டத்தின் காதி நீதிபதியாகவும் கடமையாற்றினார்.
இவ்வேளையில் அன்னாருடைய மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு மற்றும் அனைத்து ஆலிம்கள் சார்பிலும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அல்லாஹு தஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, அவர்களுடைய குற்றங் குறைகளை மன்னித்து பரிசுத்தப்படுத்தி, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக!
أللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده واغفر لنا وله
‘(யா அல்லாஹ்! அவருக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே! அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே! எம்மையும் அவரையும் மன்னித்தருள்வாயாக!)’
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா




