ஜம்இய்யாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கொழும்பு மத்தியிலுள்ள மஸ்ஜிதுகளின் இமாம்கள் ஆகியோரிடையே இடம்பெற்ற விஷேட ZOOM கலந்துரையாடல்கள்

2024 மார்ச் 19, 20, 21, 22ஆகிய திகதிகளில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கொழும்பு மத்தியிலுள்ள மஸ்ஜிதுகளில் கடமையாற்றும் இமாம்கள் ஆகியோருக்கிடையிலான தொடர் கலந்துரையாடல்கள் ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களின் தலைமையில் ZOOM தொழில்நுட்பம் வாயிலாக நடைபெற்றன.

04 கட்டங்களாக இடம்பெற்ற இக்கலந்துரையாடல்களில் ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட ‘ஜுஸுஉ-அம்ம’ பதிப்பினை பற்றிய அறிமுகம் வழங்கப்பட்டதோடு அதனை மக்கள் மயப்படுத்த மேற்கொள்ளப்படவேண்டிய செயற்பாடுகள் மற்றும் திட்டங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டன.

இந்நிகழ்வுகளில் ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, உபதலைவர் அஷ்-ஷைக் எச். உமர்தீன், நிறைவேற்றுக்குழு உறுப்பினரான அஷ்-ஷைக் என்.எம். ஷைபுல்லாஹ் ஆகியோருடன் கொழும்பு மத்திய கிளை நிர்வாகிகள் மற்றும் மஸ்ஜித் இமாம்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன