கொழும்பு மாவட்டத்திலுள்ள ஜம்இய்யா கிளைகளின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் நடைபெற்ற முக்கிய சந்திப்பு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரச்சாரக் குழுவினருக்கும் கொழும்பு மாவட்டத்திலுள்ள ஜம்இய்யா கிளைகளின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று 2026 ஆகஸ்ட் 25அன்று ஜம்இய்யா தலைமையகத்தில் நடைபெற்றது.

கொழும்பு மாவட்டத்தில் தஃவா நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடும் நோக்கில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, கொழும்பு மாவட்டத்திலுள்ள ஜம்இய்யா கிளைகளின் பிரச்சாரப் பிரிவை வலுவூட்டுதல், சமூகத்தில் காணப்படும் சிக்கல்களை இனங்கண்டு அவற்றிற்கான உரிய தீர்வுகளை வழங்குதல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.

இதில், கொழும்பு மாவட்டத்திலுள்ள ஜம்இய்யா கிளைகளின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பிரச்சாரக் குழு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

ஜம்இய்யா சார்பில், பிரச்சாரக் குழுவின் தவிசாளர் அஷ்-ஷைக் எச். உமர்தீன் மற்றும் குழுவின் துணைச் செயலாளர் அஷ்-ஷைக் ஏ.எச்.எம். அக்ரம், ஆலிம்கள் விவகாரப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன