கடந்த வருடம் கிறிஸ்தவர்களின் உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தீவிரவாத தாக்குதல் தின நிகழ்வுகளுக்கான வழிகாட்டல்கள்

ACJU/NGS/2020/008

2020.04.20 (1441.08.26)

கடந்த வருடம் கிறிஸ்தவர்களின் உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தீவிரவாத தாக்குதல் தின நிகழ்வுகளுக்கான வழிகாட்டல்கள்

கடந்த வருடம் கிறிஸ்தவ ஆலயங்கள் மீது நடாத்தப்பட்ட மிலேச்சதனமான தாக்குதல் இடம் பெற்று ஒரு வருடமாகின்ற இச்சந்தர்ப்பத்தில் அத்தினத்தை சகலரும் கவலையுடன் நினைவு கூறும் முகமாக அனைத்து மதஸ்தலங்களிலும்  நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வக்ப் சபையும் முஸ்லிம் சமயப் பண்பாட்டளுவல்கள் திணைக்களமும், மஸ்ஜித்களிலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யுமாறு வேண்டி இருப்பதை யாவரும் அறிவோம். அதற்கிணங்க அந்நிகழ்வுகளை பின்வருமாறு அமைத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழிகாட்டுகின்றது.

8:40 – 8:45 வரை கிராஅத். (இதில் சூரா மாஇதாவின் 32 வது வசனமும் மொழிபெயர்ப்பும், ஓடியோ இணைக்கப்பட்டுள்ளது).

8:45 – 8:47 வரை அமைதியாக இருந்து சப்தமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்காக துஆ செய்தல்.

8:47 – 8:55 வரை பாதிக்கப்பட்டவர்களுக்கான அனுதாபச் செய்தி. இதற்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள குறிப்புகளை பாவிக்கவும்.

 

வஸ்ஸலாம்.

அஷ-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 
 
 
 

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன