தற்போது ஐவேளைத் தொழுகைகளில் ஓதப்பட்டுவரும் குனூத்-அந்-நாஸிலாவை மேலும் 10 நாட்களுக்கு தொடர்ந்து ஓதுவோம்

2023.11.01 (1445.04.16)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு,

பலஸ்தீன் மற்றும் காஸாவில் இடம்பெற்றுவரும் மனிதாபிமானமற்ற தாக்குதல் நிறுத்தப்படவும் மேலும் உலக நாடுகள் அனைத்திலும் அமைதியும் சமாதானமும் நீதியும் நிலைநாட்டப்படவும் அனைத்து மஸ்ஜித்களிலும் தற்போது ஐவேளைத் தொழுகைகளில் ஓதப்பட்டு வருகின்ற ஃபஜ்ர் தொழுகையில் ஓதக்கூடிய குனூத்தை குனூத்-அந்-நாஸிலாவில் மேலும் 10 நாட்களுக்கு தொடர்ந்து ஓதுமாறு அனைத்து கதீப்மார்களிடமும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக்கொள்கிறது.

 

அஷ்-ஷைக் ஏ.ஜே. அப்துல் ஹாலிக்
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர்- ஃபத்வா குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன