2025 செப்டம்பர் 19ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலில் ஜம்இய்யாவின் கம்பளை கிளையின் ஏற்பாட்டில் பெற்றோர்களுக்கான இரண்டு விசேட வழிகாட்டல் நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன.
அந்தவகையில், கம்பளை – போதலப்பிட்டிய மஸ்ஜிதுத் தக்வா பள்ளிவாயலில் நடைபெற்ற நிகழ்வில் சுமார் 60க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து பயன்பெற்றனர்.
அதேபோன்று, கம்பளை – ஆன்டியாகடவத்த ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்ற நிகழ்வில் சுமார் 90 பெற்றோர்கள் கலந்து பயன்பெற்றனர்.
இதில், ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி அவர்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்தார்.
– ACJU Media –




