அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவின் உறுப்பினர் குழுக்கூட்டம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவின் உறுப்பினர் குழுக்கூட்டம் 2026 ஒக்டோபர் 07அன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.

அல்-குர்ஆன் மத்ரஸா முறைமையினை நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் சவால்களை அடையாளம் கண்டு அவற்றிற்கான உரிய தீர்வுகளை கண்டறிவது குறித்து கலந்துரையாடும் நோக்கில் இக்கூட்டம் நடைபெற்றது.

இதில், 08 மாவட்டங்களை சேர்ந்த அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, கடந்த காலங்களில் காணப்பட்ட அல்-குர்ஆன் மத்ரஸாக்களின் வெகுவான வளர்ச்சி மற்றும் தற்போதுள்ள தேக்கநிலை குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றினை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான வழிவகைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

அத்தோடு, கடந்தகால முன்னேற்றம் மற்றும் தற்போதைய சரிவு நிலை ஆகியவற்றிற்கான காரண காரியங்களை கண்டறியும் வகையில் ஆய்வுகளை மேற்கொண்டு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பான உறுப்பினர்களிடமும் பணிக்கப்பட்டது.

குறித்த இக்கூட்டத்தில் ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவின் தவிசாளர் அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிழா மற்றும் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் ஏ.சீ.எம். பாஸில் ஹுமைதி ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டிருந்தனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன