தற்போது ஐவேளைத் தொழுகைகளில் ஓதப்பட்டுவரும் குனூத்-அந்-நாஸிலாவை தொடர்ந்தும் எதிர்வரும் 10 நாட்களுக்கு ஓதுவது தொடர்பான வழிகாட்டல்

2023.10.22 (1445.04.05)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு,

பலஸ்தீன் மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அமைதியும் சமாதானமும் நீதியும் நிலைநாட்டப்படுவதற்கு அனைத்து மஸ்ஜித்களிலும் ஐவேளைத் தொழுகைகளில் ஃபஜ்ர் தொழுகையில் ஓதக்கூடிய குனூத்தை குனூத்-அந்-நாஸிலாவில் அடுத்து வருகின்ற 10 நாட்களுக்கு ஓதுமாறு அனைத்து கதீப்மார்களிடமும் 2023.10.11ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக்கொண்டிருந்தது.

அதற்கமைய குறித்த குனூத்-அந்-நாஸிலாவை ஐவேளைத் தொழுகைகளிலும் எதிர்வரும் 10 நாட்களுக்கு தொடர்ந்து ஓதுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.

 

அஷ்-ஷைக் ஏ.ஜே. அப்துல் ஹாலிக்
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர்- ஃபத்வா குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன