ACJU/FRL/2025/39/457
1447.04.17 – 2025.10.10
மஸ்ஜித்களின் கண்ணியத்துக்குரிய நிர்வாகிகள் மற்றும் இமாம்களுக்கு.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
குனூத்துன் நாஸிலா ஓதுவதை நிறுத்திக் கொள்வது தொடர்பாக
அல்லாஹு தஆலாவின் அருளாலும், காஸா மக்களின் உறுதி, தியாகத்தினாலும், உலகம் முழுவதும் முஸ்லிம்கள் ஆற்றிய துஆக்கள் மற்றும் பலரதும் முயற்சியின் விளைவாகவும் தற்போது காஸாவில் யுத்தநிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்………..
இதுவரை காஸா மக்களின் துயர்நீங்க வேண்டும் எனும் நோக்கில் குனூத்துன் நாஸிலாவை ஓதிய அனைவருக்கும் அல்லாஹ் நிரப்பமான நற்கூலியினை வழங்குவானாக!
இன்று முதல் (2025.10.10) குனூதுன் நாஸிலா ஓதுவதை நிறுத்திக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.
அத்துடன், யுத்த நிறுத்த நிலை நீடித்து மக்களுக்கு நீதியும் அமைதியும் பாதுகாப்பும் நிலைநாட்டப்படுவதற்காக ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் பிரார்த்திக்குமாறும் தங்களால் முடியுமான நல்லுதவிகள் வழங்குவதில் அக்கறை காட்டுமாறும் கேட்டுக் கொள்கிறது.
முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம்.டி.எம். ஸல்மான்
பதில் செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா




