அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில் தெரிவு செய்யப்பட விசேட கவனம் தேவையுடைய மாணவர்களுக்கான வலுவூட்டல் மற்றும் உள வள ஆலோசனை வழங்கும் நிகழ்வு 2026 ஜூலை 09 அன்று மல்வானை, அல்-முஸ்தபா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதன்போது, வாழ்வில் ஏற்படும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான வழிகள் மற்றும் பொறிமுறைகள் குறித்து விரிவான முறையில் விளக்கங்கள் அளிக்கப்பட்டதுடன் கற்றல் செயற்பாடுகளில் சிறந்து விளங்குவதற்கான சில ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இதில், தெரிவுசெய்யப்பட்ட பல மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர்.
குறித்த நிகழ்வில், சகோதரர் ரம்ஸி க்ராத்தி அவர்கள் வளவாளராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு இவ்விடயங்கள் தொடர்பாக தெளிவுகளை வழங்கினார்.
– ACJU Media –


