அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் உறுப்பினர் குழுக்கூட்டம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் உறுப்பினர் குழுக்கூட்டம் 2026 ஜூலை 28 அன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போது, ஜம்இய்யாவினால் கடந்த காலங்களில் இளைஞர்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைதிட்டங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதில், ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் தவிசாளர் அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக், நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் ஏ.எம்.எம். ஆஸாத் மற்றும் இளைஞர் விவகாரப் பிரிவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன