அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில், ‘இளைஞர்கள் மீதான சமூகப் பொறுப்புக்கள்’ எனும் தொனிப்பொருளிலான விசேட வழிகாட்டல் நிகழ்வு 2026 செப்டம்பர் 18ஆம் திகதி திகன, கும்புக்கந்துர ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.
இந்நிகழ்வின்போது, சமூகத்தில் இளைஞர்களின் முக்கியத்துவம் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டதுடன், சமுதாயத்தின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் வகிபாகம் மற்றும் அவர்களது சமூகப் பொறுப்புக்கள் குறித்தும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கும்புக்கந்துர பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மஹல்லாவாசிகள் பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து, ‘மஸ்ஜித்களூடான இளைஞர் மேம்பாடு’ செயற்றிட்டம் குறித்து பள்ளிவாயல் நிர்வாகிகளுடன் ஒரு கலந்துரையாடலும் நடைபெற்றது.
இதில், சகோதரர் ரம்ஸி க்ராத்தி அவர்கள் வளவாளராகக் கலந்துகொண்டு, இளைஞர்களின் சமூகப் பொறுப்புக்கள் மற்றும் சமுதாய முன்னேற்றத்தில் அவர்களின் பங்களிப்பு தொடர்பில் தெளிவுகளையும் விளக்கங்களையும் வழங்கினார்.


– ACJU Media –


