அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில், புளிச்சாக்குளம் கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில், பிள்ளை வளர்ப்பு தொடர்பான விசேட வழிகாட்டல் நிகழ்வொன்று 2026 ஜூலை 24அன்று புதுக்குடியிருப்பு ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.
இதன்போது, பிள்ளைகளை எதிர்காலத்தில் சிறந்த சமுதாயமாக கட்டியெழுப்புவதில் பெற்றோரின் வகிபாகம் குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன், பிள்ளைகளோடு அணுக வேண்டிய முறைகள், பிள்ளை வளர்ப்பில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
இதில், புதுக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த சுமார் 290க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
குறித்த நிகழ்வில், சகோதரர் ரம்ஸி க்ராத்தி மற்றும் அஷ்-ஷைக் ஸபருல்லாஹ் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு மேற்படி விடயங்கள் தொடர்பாக விளக்கங்களை வழங்கினர்.

– ACJU Media –


