தேசிய நூலக, ஆவணவாக்கல் சேவைகள் சபையின் தலைவர் பேராசிரியர் நந்த தர்மரத்ன மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு

2023.10.22 ஆம் திகதி இலங்கை தேசிய நூலக, ஆவணவாக்கல் சேவைகள் சபையின் தலைவர் பேராசிரியர் நந்த தர்மரத்ன மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகளுக்கிடையில் சினேகப்பூர்வ சந்திப்பொன்று கொழும்பு தேசிய நூலகத்தில் நடைபெற்றது.

குறித்த சந்திப்பில் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் ஜம்இய்யாவின் வெளியீடுகளும் பேராசிரியர் அவர்களிடம் கையளிக்கப்பட்டன.

இந்த சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர், ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் ஸல்மான் மற்றும் அதன் உறுப்பினர் அஷ்-ஷைக் இர்ஷாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 
 

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன