2025.01.01ஆம் திகதி, நாட்டை தூய்மைப்படுத்தல் எனும் தொனிப்பொருளில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘Clean Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் துவக்க நிகழ்வில் முஸ்லிம் சமயத் தலைவர்கள் சார்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் விஷேட அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலக வளாகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அரசியல் தலைவர்கள், சமயத் தலைவர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள் ‘Clean Sri Lanka’ வேலைத்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து தெளிவுபடுத்தியதுடன் சமய நிறுவனங்கள், பொது அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் என சகல பிரஜைகளும் இந்த தேசிய வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
சுற்றுச்சூழல் மாத்திரமன்றி சமூக ஒழுக்க விழுமியங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நாட்டை தூய்மைப்படுத்தி சிறந்த நாடாக மாற்றியமைக்கும் உயரிய நோக்கின் அடிப்படையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


– ACJU Media –



