அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் மற்றும் ACJU அனர்த்த நிவாரண ஒருங்கிணைப்பு மையத்தின் உறுப்பினர்கள் ஆகியோரிடையே நடைபெற்ற அவசர சந்திப்பு

2025 நவம்பர் 30ஆம் திகதி, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அனர்த்த நிவாரண ஒருங்கிணைப்பு மையத்தின் உறுப்பினர்கள் ஆகியோரிடையிலான அவசர சந்திப்பொன்று கொழும்பு, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் நடைபெற்றது.

குறித்த சந்திப்பில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்க தரப்புடன் இணைந்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தல், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குதல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு உடனடி தீர்மானங்களும் எட்டப்பட்டன.

– ACJU Media –

Related Posts

தித்வாப் புயலால் ஏற்பட்ட கடும் மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் மரணித்து அடக்கம் செய்யப்பட்டோருக்காக மறைவான ஜனாஸா தொழுகை நிறைவேற்ற விரும்பவோர், அதனை தொழுது கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன