அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுளை மாவட்டக் கிளை மற்றும் அம்மாவட்டத்திலுள்ள 09 பிராந்தியக் கிளைகளுக்குமான நிர்வாகக் குழுத் தெரிவுகள் 2026 செப்டம்பர் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் ஜம்இய்யாவின் கிளைகள் விவகாரப் பிரிவினால் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டன.
அந்தவகையில் ஹப்புத்தளை, பதுளை நகர், பசறை, குருதலாவ, பொரகஸ், வெலிமடை, பண்டாரவளை, ஹாலிஎல மற்றும் பங்கரகம்மான ஆகிய பிராந்தியக் கிளைகளுக்கான நிர்வாகத் தெரிவுகள் அந்தந்த பகுதிகளிலுள்ள மஸ்ஜிதுகளில் நடத்தப்பட்டு காரியக் குழுக்கள் தெரிவு செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, மேற்படி புதிதாக தெரிவு செய்யப்பட்ட காரியக் குழுக்களின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் முன்னைய மாவட்டக் கிளை உறுப்பினர்கள் பதுளை, அல்-அன்வர் பெரிய ஜுமுஆ மஸ்ஜிதுக்கு அழைக்கப்பட்டு பதுளை மாவட்டக் கிளைக்கான தெரிவுகள் நடத்தப்பட்டதுடன் மாவட்ட நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. ஜம்இய்யாவின் யாப்பு விதிகளுக்கமைய, இரகசிய வாக்கெடுப்பு மூலம் குறித்த தெரிவுகள் அனைத்தும் நடைபெற்றன.
ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன், கிளைகள் விவகாரப் பிரிவின் துணைச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். பவாஸ் ஆகியோரது மேற்பார்வையின் கீழ், ஜம்இய்யாவின் ஆளணியினரின் பங்களிப்புடன் இத்தெரிவுகள் யாவும் நேர்த்தியாக நடத்தி முடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










– ACJU Media –


