2026.09.14
1448.04.02
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலிம்கள் விவகாரப் பிரிவு ‘கதீப்மார்களை வலுவூட்டுவோம்’ என்ற தலைப்பில் தொடரான கருத்தரங்குகளை நடத்த தீர்மானித்துள்ளது.
இக்கருத்தரங்கு தொடராக இரு நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் பரவலாக நாட்டிலுள்ள அனைத்து கதீப்மார்களும் கலந்து பயன்பெற்றுக் கொள்ளலாம். ஆனால் ஓர் அமர்வில் 50 கதீப்மார்களுக்கே சந்தர்ப்பம் வழங்கப்படும். அது இங்கு இணைக்கப்பட்டுள்ள Google விண்ணப்பப்படித்தை பூர்த்தி செய்யும் முறைப் பிரகாரம் வழங்கப்படும்.
இணைப்பு: https://forms.gle/P5cTtJcESRujGnKt5
இக்கருத்தரங்கில் கலந்துகொள்ளும் கதீப்மார்கள் பொதுவாக பின்வரும் அம்சங்களை கொண்டவர்களாக இருப்பது வரவேற்கத்தக்கது.
வேண்டப்படும் அம்சங்கள்:
1. ஆர்வமுள்ளவராக இருத்தல்
2. குத்பா நிகழ்த்தக் கூடியவராக இருத்தல்.
3. மஸ்ஜித்களில் கடமைபுரியும் ஆலிம்களில் குத்பா செய்யக் கூடியவர்களுக்கு
முன்னுரிமை வழங்கப்படும்.
4. தொடர்ச்சியாக இருநாள் அமர்வுகளிலும் ஆரம்பம் முதல் இறுதி வரை தவறாமல்
கலந்து கொள்ள முடியுமானவராக இருத்தல் வேண்டும்.
இக்கருத்தரங்கில் கலந்தகொண்டு பயன்பெற அனைத்து கதீப்மார்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, ஜம்இய்யாவின் மாவட்ட, பிரதேச கிளைப் பொறுப்புதாரிகள் இச்செய்தியினை அனைத்து கதீப்மார்களுக்கும் சென்றடைய ஒத்துழைக்குமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.
மேலும் ஒவ்வொரு மஸ்ஜித் நிர்வாகிகளும் தமது மஸ்ஜித்களில் குத்பா செய்யும் கதீப்மார்களுக்கும் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன்பெற அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்குமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.
– ஆலிம்கள் விவகாரப் பிரிவு – ACJU –


