ACJU/NGS/2026/108
2026.09.12 (1448.03.29)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முன்னாள் உதவிப் பொதுச் செயலாளராகவும் நீண்டகாலமாக ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும் செயற்பட்ட அஷ்-ஷைக் ஏ.ஆர்.எம். மஃரூஃப் கபூரி (اللهم اغفرله وارحمه) அவர்களது மரணச் செய்தி எம்மை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அன்னார் இஸ்லாமியக் கல்வி, தஃவா மற்றும் சமூகப் பணிகளில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒருவராவார்.
குறிப்பாக லிபியா தஃவா மத்திய நிலையத்தின் பணிப்பாளராகவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஆய்வு உத்தியோகத்தராகவும் கம்பஹா மாவட்ட காதி நீதிபதியாகவும் அன்னார் பதவி வகித்ததுடன் அவற்றினூடாக சமூகத்திற்கு பெறுமதிமிக்க பல பங்களிப்புகளையும் ஆற்றியுள்ளார்.
அத்தோடு, மஹரகம, கபூரிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபராகவும் அவர் கடமையாற்றியதுடன் அதனூடாக பல ஆலிம்களை சமூகத்தில் உருவாக்க அரும் பங்காற்றியவருமாவார்.
அவரது மறைவு ஒரு பேரிழப்பாகும். இந்நேரத்தில் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
அல்லாஹ் தஆலா அவர்கள் இருவருடைய பாவங்களை மன்னித்து, இருவருக்கும் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயர்ந்த சுவனத்தை அருள்வானாக!
அவர்களது குடும்பத்தினருக்கு இந்த இழப்பைத் தாங்கும் பொறுமையையும் மன ஆறுதலையும் வழங்குவானாக!
أللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده واغفر لنا وله
“(யா அல்லாஹ்! அவருக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே! அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே! எம்மையும் அவரையும் மன்னித்தருள்வாயாக!)”
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


