அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவினால், ‘நல்லிணக்கமும் போதையற்ற ஆரோக்கிய வாழ்வும்’ எனும் தொனிப்பொருளிலான வழிகாட்டல் நிகழ்வுகள் 2026 செப்டம்பர் 07 மற்றும் 08 ஆகிய திகதிகளில் சேனபுர மற்றும் வவுனியா புனர்வாழ்வு மையங்களில் நடைபெற்றன.
குறித்த புனர்வாழ்வு மையங்களில் தங்கி சிகிச்சை பெற்றுவருவோரை மையப்படுத்தி நடைபெற்ற இந்நிகழ்வுகளில், சுமார் 230 பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
இந்நிகழ்வுகளில், நல்ல சிந்தனைகளை வளர்த்தல் மற்றும் கடைபிடித்தல், சமூகத்திற்கு பயனுள்ள மனிதனாக வாழ்தல், ஆரோக்கிய வாழ்க்கை முறையை பேணுதல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து தெளிவாக விளக்கமளிக்கப்பட்டன.
குறித்த நிகழ்வுகளில், சகோதரர் ரம்ஸி க்ராத்தி மற்றும் அஷ்-ஷைக் நுஃமான் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு மேற்படி விடயங்கள் குறித்த தெளிவுகளை வழங்கினர்.


– ACJU Media –


