2026 ஏப்ரல் 09ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சமய பண்டாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் கொழும்பு மாவட்ட மஸ்ஜிதுகளின் கதீப்மார்கள் மற்றும் நம்பிக்கையாளர் சபையினருக்கான விசேட வழிகாட்டல் நிகழ்வு ZOOM வாயிலாக நடைபெற்றது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு மஸ்ஜிதுகள் எவ்வாறு செயற்படவேண்டும்?, குத்பா உரைகளை எவ்வாறு அமைத்துக் கொள்ளவேண்டும்? என்பது தொடர்பில் விரிவான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.
இதில், கொழும்பு மாவட்ட பள்ளிவாயல்களின் கதீப்மார்கள், நம்பிக்கையாளர் சபையினர் என பலர் கலந்து பயன்பெற்றனர்.
இந்நிகழ்வில், ஜம்இய்யா சார்பில் அதன் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டு வழிகாட்டல்களை வழங்கினார்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கௌரவ பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், பிரதிப் பணிப்பாளர் என். நிலோபர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

– ACJU Media –


