இந்திய உயர் ஸ்தானிகருடனான சந்திப்பு

2021.11.14

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரின் அழைப்பின் பெயரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தூதுக்குழு கடந்த 2021.11.12 ஆம் திகதி இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டது. அதில் ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், உப தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் எஸ்.எச். ஆதம்பாவா, உதவிச் செயலாளர்களில் ஒருவரான அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம் மற்றும் சமூக சேவைப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத் ஆகியோர் ஜம்இய்யாவின் சார்பில் கலந்து கொண்டனர். இதன்போது இந்தியாவுடனான எமது உறவு பற்றியும், கல்வி மற்றும் இனங்களுக்கிடையில் சகவாழ்வை கட்டியெழுப்புதல் போன்ற விடயங்களில் எதிர்கால கூட்டு முயற்சிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

ஊடகப் பிரிவு

 

 
 

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன