உயர்தரப் பரீட்சை முடிவடையும் வரை ஜுமுஆக்களை சுருக்கிக் கொள்வது சம்பந்தமாக

ACJU/NGS/2025/196
2025.11.12 (1447.05.20)

2025ஆம் ஆண்டிற்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை 2025.11.10ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 05ஆம் திகதி வரை நாடுபூராகவும் நடைபெறவுள்ளது.

நேர அட்டவணையின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை ஜுமுஆவுக்குப் பிறகும் சில பரீட்சைகள் நடைபெறவிருப்பதனால் மாணவர்களது நலன் கருதி ஜுமுஆ பிரசங்கம் மற்றும் தொழுகையினை பிற்பகல் 1.00 மணிக்கு முன்னர் முடிவுறும் வகையில் அமைத்துக் கொள்ளுமாறும் பரீட்சை முடிவடையும் வரை இதனை நடைமுறைப்படுத்துமாறும் சகல கதீப்மார்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வேண்டிக் கொள்கிறது.

– ACJU Media –

Related Posts

தித்வாப் புயலால் ஏற்பட்ட கடும் மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் மரணித்து அடக்கம் செய்யப்பட்டோருக்காக மறைவான ஜனாஸா தொழுகை நிறைவேற்ற விரும்பவோர், அதனை தொழுது கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன