அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில் முஅல்லிமாக்களுக்கான ஆரம்பகட்ட அல்-குர்ஆன் கற்பித்தல் பயிற்சிநெறி, 2026 நவம்பர் 02 மற்றும் 03 ஆகிய திகதிகளில் ஹட்டன், டிக்கோயா அல்-கதீஜா மகளிர் அரபுக் கல்லூரியில் நடைபெற்றது.
இதன்போது, முஅல்லிமாக்களுக்கான நடத்தை விதிகள், கற்பித்தல் முறைமை, வகுப்பறை முகாமைத்துவம், ‘தஜ்தீத்’ முறைமையிலான அல்-குர்ஆன் மத்ரஸா மேலாண்மை, தஜ்வீத் பாடம், மத்கலுல் குர்ஆன் மற்றும் மஆரிபுல் வஹீ ஆகிய பாடத்திட்டங்களை கற்பிக்கும் முறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தெளிவான முறையில் விளக்கங்கள் அளிக்கப்பட்டதுடன், இவை குறித்த சந்தேகங்களுக்கும் தெளிவுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், ஹட்டன், டிக்கோயா பகுதியினைச் சேர்ந்த முஅல்லிமாக்கள் பலர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
இதில், ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவின் ஆளணியினரான அஷ்-ஷைக் அஃலம், அஷ்-ஷைக் பஸால், அஷ்-ஷைக் அஸ்வர் அலி, அஷ்-ஷைக் ராஷித் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு, மேற்படி விடயங்கள் தொடர்பில் விளக்கங்களையும் தெளிவுகளையும் வழங்கினர்.
– ACJU Media –


