ACJU/FRL/2025/47-466
2025.11.28 (1447.06.06)
அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு
எமது நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடுமையான மழை, பலத்த காற்று, மலைச்சரிவு அபாயம் மற்றும் வெள்ளநீர் காரணமாக பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல குடும்பங்கள் சேதங்களுக்கு உள்ளாகி, தற்காலிக பொதுக் கட்டிடங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
இவ்வாறான சோதனைகளின் போது அடியார்கள் தன் பக்கம் திரும்ப வேண்டும் என்பதையே அல்லாஹ் விரும்புகின்றான். இச்சோதனைகள் நீங்க பாவமான, வீணான காரியங்களிலிருந்து விலகி, தொழுகை, நோன்பு, துஆ, திக்ர், இஸ்திஃபார், மற்றும் ஸதகா போன்ற நல்லமல்களில் ஈடுபட்டு, நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பிரார்த்திப்பதோடு, அல்லாஹ்வின் பக்கம் நாம் திரும்ப வேண்டும்.
ஆகவே கடுமையான மழை, பலத்த காற்று, மலைச்சரிவு அபாயம் மற்றும் வெள்ளப்பெருக்கு முழுமையாக நீங்கும் வரைக்கும் மஸ்ஜித்கள், வீடுகள் மற்றும் ஏனைய இடங்களில் தொழும் அனைவரும் ஐவேளைத் தொழுகைகளிலும் தொடர்ந்து குனூத் அன்னாஸிலாவை இக்லாஸுடனும், உறுதியான நம்பிக்கையுடனும் ஓதிவருமாறு கேட்டுக் கொள்வதோடு, மஸ்ஜிதுடைய இமாம்கள் குனூத் அந்-நாஸிலாவை ஓதும் போது பின்வரும் துஆக்களை ஓதுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.
اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا (صحيح البخاري)
اللَّهُمَّ عَلَى الْآكَامِ وَالْجِبَالِ وَالْآجَامِ وَالظِّرَابِ وَالْأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ (صحيح البخاري)
اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا (صحيح البخاري)
اللَّهُمَّ اجْعَلْهَا رَحْمَةً وَلَا تَجْعَلْهَا عَذَابًا، اللَّهُمَّ اجْعَلْهَا رِيَاحًا وَلَا تَجْعَلْهَا رِيحًا (المعجم الكبير للطبراني)
اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ هَذِهِ الرِّيحِ، وَخَيْرِ مَا فِيهَا، وَخَيْرِ مَا أُمِرَتْ بِهِ، وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذِهِ الرِّيحِ، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أُمِرَتْ بِهِ (سنن الترمذي)
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
அஷ்-ஷைக் எம்.ரீ.எம் ஸல்மான்
பதில் செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை





