2026 ஏப்ரல் 08ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவினர் மீத்தோட்டமுல்ல, அல்-அமான் ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றுவரும் அல்-குர்ஆன் மத்ரஸாவிற்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அதன் செயற்பாடுகள் மற்றும் நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.
ஜம்இய்யாவின் பாடத்திட்டத்திற்கமைய 2012 இல் தொடங்கப்பட்ட குறித்த மத்ரஸாவானது கடந்த காலங்களில் பல்வேறு சவால்களை சந்தித்தபோதிலும், 06 முஅல்லிமாக்கள் மற்றும் 135 மாணவர்களுடன் தற்போது வரை சிறப்பாக இயங்கி வருகிறது.
இதன்போது, குறித்த மத்ரஸா நிர்வாகிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், ஜம்இய்யாவிடமிருந்து தடையற்ற பாடத்திட்டம், முறையான மேற்பார்வை, முஅல்லிம்கள் மற்றும் முஅல்லிமாக்களுக்கான கற்பித்தல் பயிற்சிநெறி ஆகியவற்றை தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்ததுடன் மாணவர்களுக்கான பரீட்சைகளை நடத்தி அவர்களை ஊக்குவிக்கும் முகமாக சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை வழங்குவது தொடர்பான யோசனைகளையும் முன்வைத்தனர்.
மத்ரஸா நிர்வாகிகளது கோரிக்கைகள் கவனத்திற்கொள்ளப்பட்டதுடன் அவற்றை செயற்படுத்த எதிர்காலத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதில், ஜம்இய்யா சார்பில் அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் அஃலம், ஆய்வு மற்றும் வெளியீட்டுப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் பஹத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
– ACJU Media –


