அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் தெரிவு பற்றிய உத்தியோகபூர்வ அறிவித்தல்

Ref: ACJU/PRE/2021/003

2021.03.12 (27.07.1442)

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளராக கடந்த பல ஆண்டுகளாக மதிப்பிற்குரிய அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக் ஹஸ்ரத் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கடமையாற்றியமை நாம் அறிவோம். அவரின் வபாத்தை தொடர்ந்து ஏற்பட்ட இவ்வெற்றிடத்தை நிரப்பும் வகையில் கடந்த 2021.03.06 ஆம் திகதியன்று நடைபெற்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் அஷ்-ஷைக் அர்கம் நூராமித் அவர்கள் ஜம்இய்யாவின் யாப்பின் பிரகாரம் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார்கள் என்பதை சகலருக்கும் அறியத்தருகிறோம்.

வஸ்ஸலாம்.

 

அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக்
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன