‘ஆரோக்கிய வாழ்க்கை மற்றும் சகவாழ்வு’ எனும் தலைப்பில் சேனபுர மற்றும் வவுனியா புனர்வாழ்வு மையங்களில் நடைபெற்ற வழிகாட்டல் நிகழ்ச்சி

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில் சேனபுர மற்றும் வவுனியா பகுதிகளில் அமைந்துள்ள புனர்வாழ்வு மையங்களில் சிகிச்சை பெற்று வருவோருக்கான ‘ஆரோக்கிய வாழ்க்கை மற்றும் சகவாழ்வு’ எனும் தலைப்பிலான வழிகாட்டல் நிகழ்ச்சிகள் 2026 ஜூன் 08அன்று குறித்த மையங்களில் நடைபெற்றன.

இந்நிகழ்வுகளில் போதைப்பழக்கம் போன்ற சமூக சீர்கேடுகளின் பாரதூரம் மற்றும் உடலியல் கேடுகள் குறித்து விழிப்புணர்வு ஊட்டப்பட்டதுடன் நல்ல சிந்தனைகளை பேணிக் கடைபிடித்தல், சமூகத்திற்கு பயனுள்ள மனிதனாக வாழ்தல், ஆரோக்கிய வாழ்வை பேணுதல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்தும் தெளிவாக விளக்கங்கள் வழங்கப்பட்டன.

சேனபுர புனர்வாழ்வு மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் 247 பேரும் வவுனியா புனர்வாழ்வு மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் 128 பேரும் கலந்து பயன்பெற்றனர்.

குறித்த நிகழ்வுகளில் ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஆளணியினரான சகோதரர் ரம்ஸி க்ராத்தி, அஷ்-ஷைக் ஸபருல்லாஹ் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டிருந்தனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன