அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மகளிர் விவகாரப் பிரிவின் ஏற்பாட்டில் பெண்களை வலுவூட்டுவதன் அவசியம் குறித்து கலந்துரையாடுவதற்கான விசேட ஒன்றுகூடலொன்று 2026 ஜூன் 30 அன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில், சமூக முன்னேற்றத்தில் பெண்களின் வகிபாகம் மற்றும் முக்கியத்துவம் குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான வழிவகைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் மார்க்க வரையறைகளுக்குட்பட்டு பெண்களும் சகல துறைகளிலும் கால் பதிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது பேசப்பட்டது.
இந்நிகழ்வில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தத்தின் சாதக, பாதகங்கள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இதில், ஆலிமாக்கள் மற்றும் துறை சார்ந்த பெண்கள் என 20 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.
இந்நிகழ்வில், ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் ZOOM வாயிலாக கலந்துகொண்டிருந்ததுடன், நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் இர்பான் முபீன் மற்றும் மகளிர் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் சிராஜ் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
– ACJU Media –


