அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில் ‘சிறந்த பிரஜையாக வாழ்தல்’ எனும் தொனிப்பொருளிலான மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டல் நிகழ்ச்சி 2026 ஜூன் 19 அன்று மாவனெல்ல, கனேதென்ன-அல்-மதீனா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், சமூகத்தினதும் நாட்டினதும் முன்னேற்றத்தில் மாணவர்களின் பங்களிப்பு குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன் எதிர்காலத்தில் அறிவும் ஒழுக்கமும் அமையப்பெற்ற சிறந்த சமூகமாக திகழ்வதற்கு அடிப்படையான சில வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.
இதில், குறித்த பாடசாலையில் கற்கும் சுமார் 65க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர்.
குறித்த நிகழ்வில், ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப்பிரிவின் ஆளணியினரான சகோதரர் ரம்ஸி க்ராத்தி, அஷ்-ஷைக் நுஸ்ரத் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.
– ACJU Media –



