இலங்கையில் இவ்வருட (2025 – 1446) அறபா நோன்பு தொடர்பான வழிகாட்டல்

ACJU/FRL/2025/18-436
2025.06.04 (1446.12.07)

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு

அறபாவுடைய தினம் என்பது துல்ஹிஜ்ஜாவுடைய ஒன்பதாவது தினமாகும். இத்தினத்தில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.

துல்ஹிஜ்ஜா ஒன்பதாம் நாளில் நோற்கப்படும் அறபா நோன்பு தொடர்பாக ஹதீஸ்களில் பல சிறப்புக்கள் வந்துள்ளன.

‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அறபாவுடைய நாளில் நோற்கப்படும் நோன்பு பற்றிக் கேட்கப்பட்ட பொழுது, அது முன்சென்ற ஓர் ஆண்டிற்கும் பின்வரக்கூடிய ஓர் ஆண்டிற்கும் பாவமன்னிப்பாக அமையும்’ என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் -1162)

மக்காவில் ஹாஜிகள் அறபாவில் பிறை 9ஆம் நாளில் தரிப்பதும் ஏனைய நாடுகளில் பிறை 9ஆம் நாளன்று அறபா நோன்பு நோற்பதும் பிறை மாதம் ஆரம்பமாகுவதை அடிப்படையாக வைத்து வேறுபடலாம். இதுவே பெரும்பான்மையான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடும் உறுதியான கருத்துமாகும்.

இக்கருத்தையே அறபா நோன்பு விடயத்தில் அஷ்-ஷைக் இப்னு உஸைமின் றஹிமஹுல்லாஹ் அவர்கள் உட்பட பெரும்பான்மையான தற்கால மார்க்க அறிஞர்களும் தாருல் உலூம் தேவ்பந்த் மற்றும் றாபிததுல் ஆலம் அல்-இஸ்லாமிய்யின் இஸ்லாமிய பிக்ஹ் ஒன்றியம் ஆகிய பத்வா அமைப்பினர்களும் கொண்டுள்ளனர்.

இதுவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு மற்றும் ஃபத்வாக் குழுவின் நிலைப்பாடாகும். இதனைப் பின்வரும் இணைப்பில் பார்வையிடலாம்.
https://www.acju.lk/ta/arf-hjj-ftw/

அதனடிப்படையில் எமது நாட்டில் இவ்வருடம் துல்ஹிஜ்ஜா மாதத்தின் ஒன்பதாவது தினம் எதிர்வரும் 2025.06.06 ஆம் திகதி வெள்ளிக்கிழமையாகும்.

அறபாவுடைய நோன்பு நாள் குறிப்பிடப்பட்டு ஹதீஸ்களில் வந்துள்ள சுன்னத்தான நோன்புகளில் உள்ளடங்குவதனால் இந்நோன்பை வெள்ளிக்கிழமை தினத்தில் தனித்து நோற்றுக் கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.

வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய தினங்களில் ஏதாவது ஒரு தினத்தில் மாத்திரம் நோன்பு நோற்பது தொடர்பான மார்க்க விளக்கத்தினை பின்வரும் இணைப்பினூடாக பார்வையிடலாம். 

https://www.acju.lk/ta/fr-std-fst-ftw/

அல்லாஹு தஆலா நம்மனைவருக்கும் அறபாவுடைய நோன்பை நோற்று அதன் சிறப்புக்களை அடைந்து கொள்வதற்கு அருள்புரிவானாக.

நிறைவேற்றுக் குழு :https://www.acju.lk/executive-committee-en/

ஃபத்வாக் குழு hவவிள: https://www.acju.lk/fatwa/
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன