அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பெயரில் போலி செய்திகளை வெளியிட்டமை தொடர்பாக

2022.11.02

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உத்தியோகபூர்வ கடிதம் (லெட்டர் ஹெட்), உத்தியோகபூர்வ முத்திரை மற்றும் கௌரவத் தலைவர் அவர்களின் கையொப்பத்தை போலியாகப் பயன்படுத்தி உண்மைக்குப் புறம்பான செய்தியொன்றை சமூக வலைத்தளங்களில் காணமுடிகிறது. இச்செய்தி போலியானது என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இதுபோன்ற ஒரு போலி செய்தியினை வெளியிட்டமை தொடர்பாக ஏளவே 2022.10.26 ஆம் திகதி ஸைபர் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டதோடு கூடிய விரைவில் இது சம்பந்தப்பட்டவர்களுக்கெதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 
 
 
 

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன