கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் ஏற்பட்ட படகு விபத்து தொடர்பாக

ACJU/NGS/2021/261

2021.11.23

இன்று (23.11.2021) கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் ஏற்பட்ட படகு விபத்தில் மரணம் எய்தியவர்களுக்கு அல்லாஹுதஆலா ஷஹீதுடைய பாக்கியத்தை வழங்கி உயர்ந்த சுவனத்தை வழங்க வேண்டுமென்றும், வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவோர் அவசரமாக நிவாரணம் பெற வேண்டுமென்றும் பிரார்த்திக்கின்றோம்.

அவர்களுடைய குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களுக்கு அல்லாஹ் ஆறுதலையும் மன தைரியத்தையும் வழங்குவானாக.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் இப்பிரச்சினை தொடர்பில் அவசரமாக தீர்வை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக்கொள்கிறது.

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன