காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்! ஆபத்துக்களை விட்டும் காத்துக் கொள்வோம்!

ACJU/ SOC/2025/110
2025.11.28  (1447.06.06)
 
மஸ்ஜித் சம்மேளனம்,
ஜுமுஆ மஸ்ஜித்கள் மற்றும் தக்கியாக்களின் நிர்வாகிகள், 
உலமாக்கள், சமூக நல அமைப்புகள்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மாவட்ட மற்றும் பிரதேச கிளை பொறுப்புதாரிகள்
 
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கத்தால் உருவான ‘டிட்வா’ (DITWAH) புயல் காரணமாக கிழக்குக் கடற்கரை உட்பட நாடு முழுவதும் கடுமையான காலநிலை மாற்றம், வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து தடங்கல் ஏற்பட்டுள்ளன. இதனால் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
 
அவர்களின் குடும்பங்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆழ்ந்த அனுதாபம் தெரிவிக்கிறது.
 
இலட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து உணவிற்கும் வாழ்வாதாரத்திற்கும் போராடும் சூழலில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப்பிரிவு  தனது உதவி திட்டத்தை தொடங்கியுள்ளது.
 
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தம்மாலான உதவிகளை வழங்குவது அனைவரது கடமையும் அல்லாஹ்வின் திருப்தியை சம்பாதித்துக் கொள்வதற்கான மிகச் சிறந்த வழியும் ஆகும்.
 
‘ஸதகா அல்லாஹ்வின் கோபத்தை தணிக்கிறது.’ (திர்மிதி)
 
‘யார் தனது சகோதரருக்கு உதவுகிறாரோ, அல்லாஹ் அவருக்கு உதவுகிறான்.’ (முஸ்லிம்)
 
மஸ்ஜித் சம்மேளனங்கள் மற்றும் நிர்வாகங்கள் செய்ய வேண்டியவை:
• கிளை ஜம்இய்யாவுடன் இணைந்து கலந்துரையாடல் நடத்துதல்.
• நிதி திரட்டல் மற்றும் உதவி வழங்கும் முறைமை ஒருங்கிணைத்தல்.
• அனர்த்தம் தொடர்பான அனைத்து தகவல்களையும் மக்களிடம் கொண்டு சேர்த்தல்.
• ஜம்இய்யாவின் வழிகாட்டலின் படி திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.
• இமாம்கள் எதிர்வரும் வாரங்களில் குத்பாவை ‘அனர்த்த நிலையும் சமூக ஒத்துழைப்பும்’ என்ற தலைப்பில் வழங்குதல்
 
கிளை பொறுப்பாளர்கள், உலமாக்கள், மஸ்ஜித் நிர்வாகங்கள், சமூக நல அமைப்புகள் இணைந்து பணமாகவோ, பொருளாகவோ உதவிகளை நேரடியாகப் பகுதிகளுக்கு சென்று தேவைக்கேற்ப உதவி புரிவது மிகச் சிறந்ததாகும்.
 
மேலும் தங்களது உதவிகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனர்த்த நிவாரணக் குழுவுக்கு வழங்க விரும்புவோர் கீழ் உள்ள அதன் வங்கிக் கணக்குக்கு வைப்பிலிடுமாறும் அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.
 
All Ceylon Jamiyythul Ulama
Commercial Bank – IBU Branch
AC NO: 1901005000
 
All Ceylon Jamiyythul Ulama
Amana Bank – Main Branch
AC NO: 0010112110014
 
அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர்
செயலாளர் – சமூக சேவைப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
 
அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் ஹாலிக்
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

தித்வாப் புயலால் ஏற்பட்ட கடும் மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் மரணித்து அடக்கம் செய்யப்பட்டோருக்காக மறைவான ஜனாஸா தொழுகை நிறைவேற்ற விரும்பவோர், அதனை தொழுது கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன